கெய்ரோ,
எகிப்து தலைநகர் கெய்ரோவின் மேற்கே உள்ள சக்காரா தொல்பொருள் தளத்தில் முழுக்க கான்கிரீட் கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் பிரமிடு அமைந்துள்ளது. யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட இந்த பிரமிடு 4,700 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய எகிப்தின் 3-ம் வம்ச மன்னர்களில் ஒருவரான பார்வோன் ஜோசரின் காலத்தில் கட்டப்பட்டதாகும்.
60 மீட்டர் உயரம், 28 மீட்டர் ஆழம் மற்றும் 7 மீட்டர் அகலம் கொண்ட இந்த தொன்மை வாய்ந்த மன்னர் ஜோசரின் பிரமிடு இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த 2006-ம் ஆண்டு கட்டமைப்பை மீட்டெடுப்பதற்கான ஒரு லட்சிய திட்டத்தை எகிப்து அரசு தொடங்கியது.
6.6 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.48 கோடியே 66 லட்சம்) மதிப்பிலான மறு சீரமைப்பு பணிகள் அண்மையில் நிறைவுபெற்றன. இதையடுத்து, 14 ஆண்டுகளுக்கு பிறகு மன்னர் ஜோசரின் பிரமிடு பொதுமக்களின் பார்வைக்காக மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது.