வீட்டு வரி உயர்வை ரத்து செய்யக்கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

வீட்டு வரி உயர்வை ரத்து செய்யக்கோரி குடவாசல் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on

குடவாசல்,

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூராட்சியில் வரி சீராய்வு என்ற பெயரில் வீட்டு வரி 50 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பதை கண்டித்தும், வரி உயர்வை ரத்து செய்யக்கோரியும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் நேற்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் முருகேசன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் தினகரன், காங்கிரஸ் வட்டார தலைவர் முனியய்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் லட்சுமி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் ஆனந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் கிட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது வீட்டு வரியை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com