பங்குச்சந்தை துளிகள்

* சுவென் லைப் சயின்சஸ் பங்குகளை வாங்கலாம் என ஆனந்த் ரதி நிறுவனம் தொடர்ந்து பரிந்துரை செய்துள்ளது. இந்நிறுவனம் இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.387-ஆக நிர்ணயித்து இருக்கிறது.
பங்குச்சந்தை துளிகள்
Published on

மும்பை சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கு ரூ.304.80-ல் முடிவுற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை இறுதி நிலவரத்தைக் காட்டிலும் இது 0.63 சதவீத முன்னேற்றமாகும்.

* சத்பவ் இன்ஜினீயரிங் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம் என யெஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.168-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில், நேற்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை ரூ.121.65-ல் நிலைகொண்டது. இது முந்தைய நாள் இறுதி நிலவரத்தை காட்டிலும் 0.53 சதவீத இறக்கமாகும்.

* ஜிந்தால் ஸ்டெயின்லெஸ் நிறுவனப் பங்குகளை வாங்கலாம் என ஈடல்வைஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இந்நிறுவனம் இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.65-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில், புதன்கிழமை வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை 3.67 சதவீதம் உயர்ந்து ரூ.39.55-ல் முடிவுற்றது.

* பியூச்சர் லைப்ஸ்டைல் பேஷன்ஸ் பங்குகளில் முதலீடு செய்யலாம் என எம்கே செக்யூரிட்டீஸ் நிறுவனம் பரிந்துரை செய்கிறது. இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.560-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை சந்தையில், நேற்று வர்த்தகம் முடிந்தபோது இந்தப் பங்கின் விலை ரூ.399.95-ஆக இருந்தது. செவ்வாய்க்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 1.16 சதவீத சரிவாகும்.

* பி.என்.சி. இன்ப்ராடெக் நிறுவனப் பங்குகளை வாங்கலாம் என எச்.டீ.எப்.சி. செக்யூரிட்டீஸ் நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.340-ஆக நிர்ணயித்து இருக்கிறது. புதன்கிழமை வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை ரூ.190.40-ல் நிலைகொண்டது. முந்தைய நாள் இறுதி நிலவரத்தைக் காட்டிலும் இது 0.77 சதவீத ஏற்றமாகும்.

நிறுவனப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள் பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. எனவே, பங்குகளில் முதலீடு செய்வோர் அந்த நேரத்தில் சந்தை நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்து தமது சொந்த முடிவுகளின் பேரில் அல்லது தமது முதலீட்டு ஆலோசகரின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com