தமிழகத்தில் வலிமையான அணி திமுக தலைமையில் அமையும் அதில் காங்கிரஸ் பங்கு வகிக்கும் - ப.சிதம்பரம்

தற்போது "பராசக்தி" திரைப்படம் வெளியிட்டு இருந்தால், நிச்சயமாக தடை செய்திருப்பார்கள் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
Published on

சென்னை,

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ப.சிதம்பரம்,

டெல்லியில் நிலவிவரும் நிலைமையை பார்த்தால், தற்போது "பராசக்தி" திரைப்படம் வெளியிட்டு இருந்தால், நிச்சயமாக தடை செய்திருப்பார்கள். தமிழகத்தில் வலிமையான அணி திமுக தலைமையில் அமையும், அதில் காங்கிரஸ் பங்கு வகிக்கும். தமிழகத்தை இருண்ட மாநிலமாக மாற்றும் இந்த ஆட்சி இறங்கி, புதிய முற்போக்கு ஆட்சி மலர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com