வேன் மோதி வாலிபர் சாவு

வேன் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேன் மோதி வாலிபர் சாவு
Published on

காஞ்சீபுரம்,

வேலூர் மாவட்டம் அரக்கோணம், கடம்பத்தூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பாரதி (வயது 19). இவர் தனது மோட்டார் சைக்கிளில் காஞ்சீபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். காஞ்சீபுரத்தை அடுத்த விசகண்டிகுப்பம் என்ற இடத்தில் செல்லும்போது அந்த வழியாக வேகமாக வந்த வேன் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com