வாரம் ஒரு திருமந்திரம்

திருமந்திரம் என்னும் அற்புத நூலை, பொருள்புரிந்து தெளிந்தால், வாழ்வில் பல இன்னல்களில் இருந்து விடுபடலாம்.
Published on

திருமந்திரம் என்னும் அற்புத நூலை, பொருள்புரிந்து தெளிந்தால், வாழ்வில் பல இன்னல்களில் இருந்து விடுபடலாம். திருமூலரால் அருளப்பட்ட இந்த நூல், சிவனின் குணங்களைப் பற்றி மட்டும் பேசாமல் மனித வாழ்வில் சிறப்பது பற்றிய தெளிந்த அறிவுரையையும் சொல்கிறது. அந்த நூலில் இருந்து வாரம் தோறும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு பாடலுக்கான விளக்கத்தைப் பார்ப்போம்.

பாடல்:-

அறிந்து உணர்ந்தேன் இவ்வகலிடம் முற்றும்

செறிந்து உணர்ந்து ஓதித் திருவருள் பெற்றேன்

மறந்து ஒழிந்தேன் மதி மாண்டவர் வாழ்க்கை

பிறிந்து ஒழிந்தேன் இப்பிறவியை நானே.

விளக்கம்:-

இறைவனின் அருளால், இந்த உலகத்தின் உண்மை முழுவதும் அறிந்தேன். இறையருளோடு நன்றி உணர்ந்து, இறைவனின் திருப்பெயரை ஓதி, அவனது அன்புக்கு இலக்கானேன். இறையருளை நினைக்காத அறிவற்றவர்களின் வாழ்வை நான் மறந்தேன். அதனால் இந்தப் பிறவித் துயர் தொடராத வகையில் அந்தப் பிணைப்பில் இருந்து நீங்கப்பெற்றேன்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com