கொல்கத்தா,
மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பதில் மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று கொல்கத்தா விமான நிலையம் வந்த தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோராவிடம் நிருபர்கள் இதுபற்றி கேட்டனர்.
அதற்கு அவர், வாக்கு சீட்டு முறை காலத்துக்கு மீண்டும் நாங்கள் செல்லமாட்டோம். சுப்ரீம் கோர்ட்டு பலமுறை, வாக்குச்சீட்டுகள் நமது கடந்த காலம் என்று கூறியுள்ளது என்றார். காஷ்மீர் சட்டசபை தேர்தல் எப்போது? என கேட்டதற்கு, உள்துறை மற்றும் சட்ட அமைச்சகங்களிடம் இருந்து தகவல் வருவதற்காக காத்திருக்கிறோம் என்று சுனில் அரோரா கூறினார்.