தூத்துக்குடியில் காமராஜர் 115–வது பிறந்த நாள் விழா அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடியில் காமராஜர் 115–வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவருடைய சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் காமராஜர் 115வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவருடைய சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழக முன்னாள் தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா நேற்று தூத்துக்குடியில் கொண்டாடப்பட்டது. அவருடைய சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு, நேற்று காலை தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ராஜ்மோகன் செல்வின், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், செயற்குழு உறுப்பினர் திருசிற்றம்பலம், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் மதியழகன், பிரதீப், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. இளைஞர் அணி சார்பில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பகுதி செயலாளர் பென்னி, தெற்கு மாவட்ட இளைஞர் அணி அருண்குமார், பிரேம் ஆதித்தன், சுரேஷ்குமார், ரீகன், ஷேக் முகமது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா) சார்பில் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் ஏசாதுரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தனராஜ், மைதீன், சாமுவேல் ஆனந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜனதா சார்பில் மாவட்ட தலைவர் பாலாஜி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், பொதுக்குழு உறுப்பினர் ரவிசந்திரன், வடக்கு மண்டல தலைவர் இசக்கி முத்து, சரவணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தட்சண மாற நாடார் சங்கம் சார்பில் அன்புலிங்கம் நாடார் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் சங்கத்தினர் விஜய ஆனந்த் நாடார், திருசங்கு நாடார், ஜெயதுரை, அருள் மற்றும் பலர்கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் வி.வி.சதீஷ், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட பொருளாளர் செல்வன், அமைப்பாளர் ரவி, துணை செயலாளர் விஜயன், மாநகர பொருளாளர் துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் பள்ளி மாணவர்கள் சிலர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தமிழ் மாநில காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல், தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட துணை தலைவர்கள் அம்பிகாபதி, ராஜகோபாலன், ராஜசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதே போல் தெற்கு மாவட்ட த.மா.கா. சார்பில் தெற்கு மாவட்ட தலைவர் விஜயசீலன், தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் வேல்முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட சிவாஜி மன்ற தலைவர் எட்வின் பாலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில், தூத்துக்குடி மண்டல செயலாளர் இசக்கிதுரை, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மண்டல தலைவர் வெற்றி சீலன், பொருளாளர் ரஸ்கின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com