திருப்பதி: அலிபிரி நடைபாதையில் பக்தர்களுக்கு அனுமதி - தேவஸ்தான அதிகாரி தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிபிரி நடைபாதையில் மேற்கூரை சீரமைப்பு பணிகள் முடிந்துவிட்டதால் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தான அதிகாரி ஜவஹர் ரெட்டி தெரிவித்தார்.
திருப்பதி: அலிபிரி நடைபாதையில் பக்தர்களுக்கு அனுமதி - தேவஸ்தான அதிகாரி தகவல்
Published on

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் மலையடிவாரத்தில் உள்ள அலிபிரியில் இருந்து திருமலைக்கு நடந்து செல்வார்கள். இந்த நடைபாதையின் மற்கூரைகள் பழுதடைந்திருந்ததால் அதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதனால் கடந்த சில மாதங்களாக அலிபிரி நடைபாதையில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தற்போது மேற்கூரை சீரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. இதனை தேவஸ்தான அதிகாரி கே.எஸ்.ஜவஹர் ரெட்டி பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது கூடுதல் அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி உடனிருந்தார்.

ஆய்வின்போது ஜவஹர் ரெட்டி கூறியதாவது:-

அலிபிரி முதல் திருமலை வரையிலான நடைபாதையின் கூரை அமைக்கும் பணிகள் நன்கொடையாளர்களின் உதவியுடன் நிறைவடைந்துள்ளது. இதனால் நடைபாதையில் பக்தர்கள் செல்வதற்கு வசதியாக இருக்கும். நடைபாதையில் பக்தர்களைஅனுமதித்த பிறகும், வளர்ச்சித் திட்டங்களை மேம்படுத்த தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் வருகிற 7-ந் தேதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற இருப்பதால் அன்று முதல் அலிபிரி நடைபாதையில் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com