வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
Published on

சென்னை,

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஈரானில் தவித்து வரும் தமிழக மீனவர்களை மீட்க கோரி 19.05.2020 அன்று எழுதிய கடிதத்தை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

அதன்படி, ஐ.என்.எஸ். ஜலஷ்வா கப்பல் மூலம் தமிழக மீனவர்கள் 681 பேர் கடந்த ஜூலை 1 ஆம் தேதி பாதுகாப்பாக தமிழகம் திரும்பினர். அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆனால், கப்பலில் இடம் இல்லாத காரணத்தால் இன்னும் தமிழக மீனவர்கள்40 பேர், ஈரானிலேயே தவித்து வருகின்றனர். எனவே, அந்த மீனவர்களை தமிழக அழைத்து வர நடவடிக்கை வேண்டும் என உங்களை வலியுறுத்துகிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com