கத்தியை காட்டி பொதுமக்களிடம் பணம் பறித்த 6 பேர் கைது

கத்தியை காட்டி பொதுமக்களிடம் பணம் பறித்த 6 பேர் கைது செய்யப்ட்டனர்.
Published on

திண்டுக்கல்

திண்டுக்கல் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சவேரியார்பாளையம், முத்தழகுபட்டியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது பொதுமக்களிடம் கத்தியை காட்டி பணம் பறித்ததாக சவேரியார்பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 48), அருண் (30), மேட்டுபட்டியை சேர்ந்த ஸ்டீபன் (25), முத்தழகுபட்டியை சேர்ந்த ஜான்விவேக் (27) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுபோல திண்டுக்கல் தோமையார்புரம் பகுதியில் நகர் வடக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பொதுமக்களிடம் கத்தியை காட்டி பணம் பறித்த அதே பகுதியை சேர்ந்த சரவணன்(40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் அருகே உள்ள மாலப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (41) இவர் நேற்று அந்த பகுதியில் உறவினருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சவேரியார் பாளையத்தை சேர்ந்த முட்டைக்கண் ரவி (60) என்பவர் பழனிசாமியிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் முட்டைக்கண் ரவியை மடக்கி பிடித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் வழக்குப் பதிவு செய்து, முட்டைக்கண் ரவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com