ட்விட்டரில் டாப் 10: சினிமா பெண் பிரபலங்கள்; அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள்

சினிமா பெண் பிரபலங்கள்; அரசியல்வாதிகள் , விளையாட்டு வீரர்கள் என டாப் 10 பட்டியலை ட்விட்டர் வெளியிட்டு உள்ளது.
Published on

சென்னை

2019 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடியவிருக்கிறது.  ட்விட்டர் 2019 ஆம் ஆண்டின் டாப் 10 ஹேஷ்டேக், டாப் 10 அரசியல் பிரபலங்கள், டாப் 10 சினிமா பிரபலங்கள் என பட்டியலை வெளியிட்டுள்ளது.

சினிமா பிரபலங்கள் பட்டியலில் அமிதாப் பச்சன் முதல் இடத்தில் உள்ளார். தொடர்ந்து அக்ஷய் குமார், சல்மான்கான், ஷாருக்கான், விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், ரன்வீர் சிங், அஜய் தேவ்கான், மகேஷ் பாபு, அட்லீ ஆகியோர் உள்ளனர்.

அரசியல் தலைவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் பிரதமர் மோடியும் தொடர்ந்து ராகுல்காந்தி, அமித் ஷா, அரவிந்த கெஜ்ரிவால், யோகி ஆதித்யநாத், பியூஷ் கோயல், ராஜ்நாத் சிங், அகிலேஷ் யாதவ், கவுதம் காம்பீர், நிதின் கட்காரி ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

பெண் அரசியல் தலைவர்கள் பட்டியலில் ஸ்மிருதி இரானி முதல் இடத்தில் உள்ளார். தொடர்ந்து பிரியங்கா காந்தி, சுஷ்மா சுவராஜ், நிர்மலா சீதாராமன், மம்தா பானர்ஜி, பிரியங்கா சதுர்வேதி, அல்கா லமபா, மாயாவதி, மெகபூபா முப்தி, அதிஷி ஆகியோரும் இடம் பெற்று உள்ளனர்.

விளையாட்டு வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். தொடர்ந்து மகேந்திர சிங் டோனி, ரோகித் சர்மா, சச்சின் தெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர சிங் ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

பெண் விளையாட்டு வீராங்கனைகள் பட்டியலில் பிவி சிந்து முதல் இடத்தில் உள்ளார். தொடர்ந்து ஹேமா தாஸ், சானியா மிர்சா, மிதாலி ராஜ், மேரி கோம், ஸ்மிரிதி மந்தானா, டுடி சந்த், மானசி நயனா ஜோஷி, ரானி ராம்பால் ஆகியோரும் இடம் பெற்று உள்ளனர்.

இதற்கிடையில், இந்திய பெண் பிரபலங்கள் 10 பேர் பட்டியலில் சோனாக்ஷி சின்கா முதலிடத்தையும், அனுஷ்கா சர்மா, லதா மங்கேஷ்கர், அர்ச்சனா கல்பாத்தி, பிரியங்கா சோப்ரா , அலியா பட், காஜல் அகர்வால், சன்னி லியோன், மாதூரி திட்சீத், ராகுல் சிங் ஆகியோரும் இடம் பெற்று உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com