விஜய் பிரசாரத்துக்கு முட்டுக்கட்டை: தவெக நிர்வாகி அருண்ராஜ் குற்றச்சாட்டு

தி.மு.க., பா.ஜனதாவுக்கு என்ன உறவு இருக்கிறதோ? என்று அருண்ராஜ் கூறினார்.
விஜய் பிரசாரத்துக்கு முட்டுக்கட்டை: தவெக நிர்வாகி அருண்ராஜ் குற்றச்சாட்டு
Published on

சென்னை,

சென்னையில் த.வெ.க. கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-வேலூரில் விஜய் பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்தோம். ஆனால் நாங்கள் அனுமதி கடிதம் கொடுத்த பிறகு, முதல்-அமைச்சர் நிகழ்ச்சி வேலூரில் நடப்பதாக தகவல் சொல்கிறார்கள். அதனால் எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இது ஜனநாயகத்திற்கு எதிரானது.

Also Read
தமிழக அரசியலில் பெரும் மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர்: தவெக
விஜய் பிரசாரத்துக்கு முட்டுக்கட்டை: தவெக நிர்வாகி அருண்ராஜ் குற்றச்சாட்டு

அடுத்து சேலத்தில் 13-ந் தேதி விஜய் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்து வருகிறோம். அனுமதி கடி தம் கொடுத்து இருக்கிறோம். தற்போது அங்கு அமித்ஷா வர இருப்பதாக சொல்கிறார்கள். தி.மு.க., பா.ஜனதாவுக்கு என்ன உறவு இருக்கிறதோ? தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com