லண்டன்-பெங்களூரு விமானத்தில் திடீர் கோளாறு; அவசர தரையிறக்கம்

சம்பவம் பற்றி பொது சிவில் விமான போக்குவரத்து இயக்ககத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
லண்டன்-பெங்களூரு விமானத்தில் திடீர் கோளாறு; அவசர தரையிறக்கம்
Published on

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இருந்து பெங்களூரு நோக்கி ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் போயிங் 787-8 ரக விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது. அப்போது, அதன் விமானிகளில் ஒருவர் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் வேலை செய்யவில்லை என கண்டறிந்து உள்ளார்.

உடனடியாக நடுவானில் சென்ற விமானம் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக போயிங் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

லண்டன்-பெங்களூரு விமானத்தில் திடீர் கோளாறு; அவசர தரையிறக்கம்
வரலாற்று திருப்புமுனையை ஏற்படுத்திய இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: பியூஷ் கோயல்

இதுபற்றி ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், சம்பவம் பற்றி பொது சிவில் விமான போக்குவரத்து இயக்ககத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இயக்கக உத்தரவின்படி, அனைத்து போயிங் ரக விமானத்தின் சுவிட்சுகளும் பரிசோதனை செய்யப்பட்டன. எனினும் எந்த பாதிப்புகளும் கண்டறியப்படவில்லை என தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com