தவெக கொள்கைத் தலைவர்களின் சிலைகளுக்கு விஜய் மரியாதை

2024ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டது
தவெக கொள்கைத் தலைவர்களின் சிலைகளுக்கு விஜய் மரியாதை
Published on

சென்னை,

சினிமா துறையில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்த விஜய் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார். தவெக கட்சி தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 3ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இதனிடையே, 3ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், இந்த விழாவில் பங்கேற்றுள்ள தவெக தலைவர் விஜய் கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள தவெக கொள்கைத் தலைவர்களின் (காமராஜர், பெரியார், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள்) சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com