வாக்கு எண்ணிக்கையில் குளறுபடியா? சிவகாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண் வேட்பாளர்

சிவகாசிஊராட்சிக்கு உட்பட்ட பஞ்சாயத்து தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளதாக புகார் கூறி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை ஆதரவாளர்களுடன் பெண் வேட்பாளர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on

சிவகாசி,

சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்டபகுதியில் கடந்தமாதம் 27-ந்தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் 54 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 243 பேர் போட்டியிட்டனர். அதே போல் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள்பதவிக்கு 1163 பேரும், 31 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 188 பேரும், 3 மாவட்ட பஞ்சாயத்து பதவிகளுக்கு 23 பேர் போட்டியிட்டனர். தேர்தல் அமைதியான முறையில் நடந்தது. இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி காலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

2-ந்தேதி மாலையில் இருந்து 3-ந்தேதி மாலை வரைசிவகாசிஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டபகுதியில் பதிவான வாக்குகள்எண்ணப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் பல இடங்களில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந் ததாக புகார்கள் எழுந் தது. சிலர் தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் தகராறு செய்த னர். பல கோரிக்கைகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் நிராகரிக்கப்பட்டதாகசம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் குற்றம்சாட்டினார்கள். இந்தநிலையில் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 54 பஞ்சாயத்துக்களில் வார்டு உறுப்பினர் பதவிக்கு 1163 பேர் போட்டியிட்டனர்.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு உரியதகவல் மட்டும் கூறப்பட்டது.அவர்களுக்கான சான்றிதழ் நேற்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

இந்தநிலையில் சிவகாசி ஊராட்சி ஒன்றியம் செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்து உட்பட்ட 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதேபகுதியை சேர்ந்த ஆர்த்தி, மகாலட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் இருவருக்கும் தலா 161 ஓட்டுகள்கிடைத்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பின்னர் தபால் ஓட்டுகளை சரிபார்த்து முடிவுகளை அறிவிப்பதாக கூறிய அதிகாரிகள் முதலில் ஆர்த்தி என்பவர் வெற்றி பெற்றதாகவும், பின்னர் மகாலட்சுமி வெற்றி பெற்றதாகவும் அறிவித்ததாக தெரிகிறது.

இதை தொடர்ந்து பெண் வேட்பாளர் ஆர்த்தி தனது ஆதரவாளர்களுடன் நேற்று காலை சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் தெரிவித்தார். அதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் வாக்கு எண்ணிக்கையில் ஏதாவது சந்தேகம் இருந்தால் அது குறித்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் புகார் தெரிவித்தால் தான் சரி செய்ய முடியும், தற்போது இது குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது என்றுகூறியுள்ளார். இதையடுத்து ஆர்த்தி தனது ஆதரவாளர்களுடன் முற்றுகை போராட்டம் நடத்தினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வேட்பாளர் ஆர்த்தி வாக்கு எண்ணிக்கையில் நடைபெற்ற குளறுபடி குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோர்ட்டு மூலம் வலியுறுத்த போவதாக தெரிவித்தார். மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் ஆகிய பதவிகளுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு வாக்கு எண்ணிக்கை மையத்தில் வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஆனால் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு தற்போது தான் (நேற்று) சான்றிதழ் வழங்கப்படுகிறது.இதில் தான் குளறுபடி நடக்கிறது.அதிகாரிகளின் இந்த தவறால் எனது வெற்றி தட்டி பறிக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com