திருப்பரங்குன்றம் தொகுதியில் டி.டி.வி.தினகரன் இன்று பிரசாரம்

திருப்பரங்குன்றம் தொகுதியில் டி.டி.வி. தினகரன் இன்று பிரசாரம் செய்கிறார்.
Published on

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் மதுரை மாவட்ட செயலாளர் மகேந்திரன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் 4 கட்டமாக பிரசாரம் மேற்கொள்கிறார். அதன்படி அவர் இன்று (புதன்கிழமை) தனது முதல் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார்.

இன்று மாலை 4 மணிக்கு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட ஐராவதநல்லூரில் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து விரகனூர், பெரிய ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரிக்கிறார். 2-ம் கட்டமாக நாளை மாலை 4 மணிக்கு அவனியாபுரம் பகுதி முழுவதும் பிரசாரம் செய்கிறார்.

பின்னர் வருகிற 9-ந்தேதி 3-ம் கட்டமாக திருப்பரங்குன்றம் தியாகராஜ காலனியில் டி.டி.வி.தினகரன் பிரசாரத்தை தொடங்கி, திருப்பரங்குன்றம், ஹார்விபட்டி, திருநகர், விளாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார்.

இதையடுத்து 4-ம் கட்டமாக வருகிற 16-ந்தேதி நாகமலைபுதுக்கோட்டை, கூத்தியார்குண்டு பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.பிரசாரம் மேற்கொள்ள டி.டி.வி.தினகரன் நேற்று மதுரைக்கு வந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com