துருக்கி விமானப்படை தாக்குதல்: சிரியா போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன

துருக்கி விமானப்படை நடத்திய தாக்குதலில், சிரியா போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
Published on

அங்காரா,

சிரியாவில் ரஷியா ஆதரவு பெற்ற அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், துருக்கி ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், சிரியாவின் வடமேற்கு பகுதியில் அந்த நாட்டுக்கு சொந்தமான 2 சுகோய் ரக போர் விமானங்களை நேற்று துருக்கி சுட்டு வீழ்த்தியது. துருக்கி விமானப்படையைச் சேர்ந்த எப்-16 போர் விமானங்கள் எல்லையை தாண்டி சிரியா பகுதிக்குள் நுழைந்து, 2 சுகோய் ரக போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சிரியாவில் உள்ள மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com