தூத்துக்குடியில் சாரண, சாரணியர்களின் சிந்தனை நாள் பேரணி போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் சாரண, சாரணியர்களின் சிந்தனை நாள் பேரணியை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன் தொடங்கி வைத்தார்.
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் சாரண, சாரணியர்களின் சிந்தனை நாள் பேரணியை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன் தொடங்கி வைத்தார்.

சிந்தனை நாள்

பாரத சாரண, சாரணியர் இயக்கத்தை 1909ம் ஆண்டு பேடன் பவுல் என்பவர் தொடங்கினார். இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் சாரண, சாரணியர்களின் நற்பண்புகளை வளர்த்தல், சமூக சேவையாற்றுவது போன்றதாகும். இவர் 22.02.1857 அன்று பிறந்தார். ஆகவே பாரத சாரண, சாரணியர் இயக்கத்தினர் அவரது பிறந்த நாளை சிந்தனை நாள் என்று கொண்டாடி வருகின்றனர். அதன்படி நேற்று சிந்தனை நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி சாரண, சாரணியர்களின் சிந்தணை நாள் பேரணி நடந்தது.

பேரணி

பேரணிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி தலைமை தாங்கினார். புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜோசப் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி குரூஸ் பர்னாந்து சிலை அருகே முடிவடைந்தது.

நிகழ்ச்சியில் சாரண, சாரணியர் இயக்க மாவட்ட தலைவர் மங்களராஜ், எட்வர்டு ஜான்சன்பால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com