எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே துப்பாக்கிச்சூடு; 2 இந்திய வீரர்கள் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே நடந்த துப்பாக்கி சூட்டில் 2 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே துப்பாக்கிச்சூடு; 2 இந்திய வீரர்கள் வீரமரணம்
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு வழியாக காரி த்ரயாத் காட்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவியதாக கிடைத்த தகவலையடுத்து, இந்திய ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் 2 இந்திய ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்து வீரமரணம் அடைந்தனர். ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய ராணுவ வீரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com