லாலாபேட்டை அருகே லாரி மோதி பட்டதாரி வாலிபர்கள் 2 பேர் பலி

லாலாபேட்டை அருகே லாரி மோதி பட்டதாரி வாலிபர்கள் 2 பேர் பலியானார்கள்.
Published on

லாலாபபேட்டை,

கரூர் காந்திகிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சபரிநாதன் (வயது 21)., வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த அருண்குமார் மகன் சக்தி (22). இருவரும் நண்பர்கள் ஆவர்.

நேற்று இருவரும் கரூரில் இருந்து திருச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிள் லாலாபேட்டையை அடுத்த திம்மாச்சிபுரம் வளைவில் சென்றபோது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று அவர்கள் மீது மோதியது.

2 பேர் சாவு

இதில் தூக்கி வீசப்பட்ட சபரிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சக்தி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலலேயே பரிதாபமாக இறந்தார்.

விபத்தில் இறந்த 2 பேரும் பட்டதாரிகள் ஆவர். மேலும் லாரி மோதியதில் மோட்டார் சைக்கிள் முற்றிலும் சேதம் அடைந்தது. இது குறித்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சுப்பிரமணியனை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com