இருவேறு சாலை விபத்துகளில் - இஸ்ரோ என்ஜினீயர் உள்பட 2 பேர் சாவு

இருவேறு சாலை விபத்துகளில் இஸ்ரோ என்ஜினீயர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
Published on

ஆவடி,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த கவிதண்டலம் பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 45). இவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் உள்ள ஆவடி அடுத்த மோரை அருகே வந்த போது, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி வேன் மீது மோதியதில் கீழே விழுந்தார். இதில் தலையில் காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து தகவல் கிடைத்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக மணலியை சேர்ந்த வேன் டிரைவரான ரகு (30) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதே போல், தாம்பரம் அடுத்த ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (35). வேன் டிரைவர். இவர் நேற்று காலை மாதவரத்தில் இருந்து சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சோழிங்கநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

தாம்பரம்-மதுரவாயல் புறவழிச்சாலையில் தாம்பரம் அருகே உள்ள புலிக்கொரடு அருகே வந்தபோது, டயர் பஞ்சராகிவிட்டதால் சாலை ஓரமாக நிறுத்தி இருந்தார்.

அப்போது மகாராஜா (23) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், பழுதாகி நின்ற சரக்கு வேன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com