ராம்விலாஸ் பஸ்வானுக்கு பாரத ரத்னா விருது-மத்திய மந்திரி கோரிக்கை

ராம்விலாஸ் பாஸ்வானுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய மந்திரி பசுபதி குமார் பராஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
Published on

பாட்னா,

லோக் ஜனசக்தி கட்சி நிறுவனரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான் கடந்த ஆண்டு மரணம் அடைந்தா. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என ஏற்கனவே கோரிக்கைகள் எழுந்து உள்ளன. மத்திய மந்திரியும், ராம்விலாஸ் பஸ்வானின் சகோதருமான பசுபதி குமார் பராஸ் தற்போது இந்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அடித்தட்டு மக்களை உயர்த்துவதையே எப்போதும் எங்கள் தலைவர் கவனத்தில் கொண்டிருந்தார். மத்தியில் 6 பிரதமர்களின் கீழ் அவர் மந்திரியாக இருந்துள்ளார். சமூகத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை மறக்க முடியாது. எனவே அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரதமர் மோடியை கேட்டுக்கொள்கிறேன். அத்துடன் ராம் விலாஸ் பஸ்வான் பிறந்த தினமான ஜூலை 6-ந் தேதியை பீகாரில் அரசு விடுமுறையாகவும் அறிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்த கோரிக்கையை ஏற்கனவே பீகார் முன்னாள் முதல்-மந்திரி ஜித்தன் ராம் மஞ்சியும் எழுப்பியிருந்தார். இதைப்போல ராம்விலாஸ் பஸ்வானுக்கு பாரத ரத்னா விருது வழங்க பரிந்துரைக்குமாறு அவரது மகனும், லோக் ஜனசக்தி தலைவருமான சிராக் பஸ்வான் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாருக்கு கடிதம் எழுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com