வட கொரியா மீது கூடுதல் தடைகள் கொண்டு வர கோரிக்கை

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் வட கொரியா மீது கூடுதல் தடைகள் கொண்டு வர கோரிக்கை விடுத்துள்ளன.
வட கொரியா மீது கூடுதல் தடைகள் கொண்டு வர கோரிக்கை
Published on

வாஷிங்டன்

ஐநா பாதுகாப்பு அவையில் இத்தீர்மானத்தை கொண்டுவந்து வட கொரியாவின் ஸ்திரத்தன்மையை குலைக்கும் செயல்களுக்கு விளைவுகள் இருக்கு எனும் செய்தியை விடுக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், தென் கொரிய அதிபர் மூன், ஜப்பானிய பிரதர் அபே ஆகியோர் ஜி-20 மாநாட்டில் சந்தித்து பேசிய பின்னர் இந்த அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வட கொரியா தனது ஆத்திரமூட்டக்கூடிய, பதற்றத்தை கூட்டக்கூடிய, ஸ்திரத் தன்மையை கெடுக்கும் நடவடிக்கைகளுக்கு கடும் விளைவுகள் இருக்கும் எடுத்துக்காட்ட கூடுதல் தடைகளை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை பாதுகாப்பு சபையில் வலியுறுத்த முடிவெடுத்துள்ளன என்று மூன்று நாடுகளும் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

அத்தீர்மானத்தின்படி உலக நாடுகள் வட கொரியாவுடனான பொருளாதார உறவுகளை குறைக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கூட்டறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

வட கொரியாவுடன் எல்லைகளைக் கொண்டுள்ள நாடுகள் அதன் தற்போதைய அச்சமூட்டும், ஆத்திரமூட்டும் பாதையை தவிர்த்து அணுசக்தி திட்டங்களையும், ஏவுகணை சோதனைகளையும் உடனடியாக கைவிட சம்மதிக்க செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

அணு ஆயுதம் வைத்திருக்கும் வட கொரியாவை எப்போதும் ஏற்க மறுக்கும் இந்த மூன்று நாடுகள் அமைதியான வழியில் கொரிய தீபகற்பத்தை அணுசக்தி போட்டியிலிருந்து விலக்கி, வட கொரிய ஆபத்தை எதிர்கொள்ள இணைந்து செயலாற்றும் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளன; அந்த இலக்கை அவை பங்கிட்டு கொண்டுள்ளன என்றும் அறிக்கை கூறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com