

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் 6 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 8 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெற்ற பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 6 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 31 வயதுடைய ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 89 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 96 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 652 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 627 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.