வணக்கம்!- உலக தலைவர்களை கவர்ந்த இந்திய கலாசாரம்

வணக்கம், உலக தலைவர்களை கவர்ந்த இந்திய கலாசாரமாக உருவெடுத்துள்ளது.
Published on

ஆனால் உலக தலைவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி இருப்பது கை கூப்பி வணக்கம் தெரிவிக்கும் இந்தியாவின் பாரம்பரிய கலாசாரம்தான்.

புன்முறுவலுடன் வணக்கம் தெரிவிக்கிறார், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் இந்திய சுற்றுப்பயணத்தின்போது கடந்த 24-ந் தேதி அவரை வரவேற்று ஆமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நமஸ்தே டிரம்ப் (வணக்கம் டிரம்ப்) என்று என்ன நேரத்தில் பெயர் சூட்டினார்களோ இன்றைக்கு நமஸ்தே என்னும் வணக்கம் உலக தலைவர்களிடம் எல்லாம் பரவி வருகிறது.

நாம் இப்படி வணக்கம் தெரிவித்துக் கொள்ளலாம் (கை கூப்புகிறார்). இந்தியாவிடம் இருந்து இப்போதுதான் திரும்பி இருக்கிறேன். அங்கு யாருடனும் நான் கைகுலுக்கவில்லை. இது எளிதாகத்தான் இருக்கிறது என்று சொல்லி புன்னகைத்தார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் வணக்கம்.

அவருக்கு முன்பாக அவரது நண்பரும், இஸ்ரேல் பிரதமருமான பெஞ்சமின் நேட்டன்யாஹூ முந்திக்கொண்டு விட்டார். நாட்டு மக்கள் யாரும், யாரையும் கை கூப்பி வணக்கம் என்று சொல்லுங்கள் போதும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அவரும் அதையே பின்பற்றுகிறார். தலைவன் எவ்வழியோ மக்களும் அவ்வழி.

இந்தியாவின் வணக்கம் தெரிவிக்கும் கலாசாரம், இந்த கொரோனா வைரசை கட்டுப்படுத்த உதவும் என்றும் அவர் குரல் கொடுத்திருக்கிறார்.

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வணக்கம் சொல்லி வரவேற்கும் காட்சி.

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மட்டும் விட்டு விடுவாரா?

X

Daily Thanthi
www.dailythanthi.com