வானவில் : யுபோனின் புதிய ஸ்பீக்கர்

இப்போதெல்லாம் ஒரு பொருள் பலவித செயல்பாடுகளைக் கொண்டிருந்தால்தான் அதை மக்கள் தேர்வு செய்வர்.
வானவில் : யுபோனின் புதிய ஸ்பீக்கர்
Published on

அந்த வகையில் யுபோன் நிறுவனம் 4 விதமான செயல்பாடுகளை உடைய ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஸ்பீக்கர், பவர் பேங்க், செல்பி ஸ்டிக், டார்ச் விளக்கு ஆகியன உள்ளன. எஸ்.பி 135 ஸ்பீக்கரில் 2000 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது.

இதனால் இதை பவர் பேங்காக பயன்படுத்தி ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யலாம். இந்த பேட்டரி மூலம் 15 மணி நேரம் ஸ்பீக்கர் செயல்படும். இதில் செல்பி ஸ்டிக் உள்ளது.

இதன் மூலம் ஸ்மார்ட்போனில் செல்பி படங்களை படம் பிடிக்கலாம். இதை லேப்டாப், டேப்லெட், போன் ஆகியவற்றுடன் இணைத்து செயல்படுத்தலாம்.

யுபோன் நிறுவனத்தின் இத்தயாரிப்பின் விலை ரூ.2,499. இதை நிறுவன இணையதளத்தில் ஆர்டர் செய்யலாம், முன்னணி ஆன்லைன் இணையதளங்களிலும் இது கிடைக்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com