பேட்டரி தீர்ந்து போனால் அது விலை உயர்ந்த ஸ்மார்ட்போனாக இருந்தாலும் பயனற்று போய்விடும். அதைப் போக்குவதற்காகத்தான் வயர்லெஸ் சார்ஜர்கள் வந்துள்ளன. மாக்டெக் நிறுவனம் அதிலும் ஒருபடி மேலாக பவர் பேங்க் உள்ள வயர்லெஸ் சார்ஜரை உருவாக்கியுள்ளது.
ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், வயர்லெஸ் ஏர்பட் உள்ளிட்ட அனைத்து சாதனங்களையும் இதன் மூலம் சார்ஜ் செய்யலாம். இதன் எடை 377 கிராம் மட்டுமே. இதில் 7800 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இதன் விலை சுமார் ரூ.7,500.