எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட விகாஸ் துபேவின் மனைவி, மகன் கைது

போலீசார் நடத்திய எண்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரௌடி விகாஸ் துபேவின் மனைவி மற்றும் மகனை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர்.
Published on

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் கான்பூரில் பிரபல ரவுடியாக விளங்கி வந்த விகாஸ் துபே என்பவனை கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்வதற்காக கடந்த 2 ந்தேதி இரவில் அவனது கிராமமான பிக்ருவுக்கு போலீசார் சென்றனர். அப்போது தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு விகாஸ் துபே தப்பினான். இந்த பரபரப்பு சம்பவத்தில் துணை சூப்பிரண்டு உள்பட 8 போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதனை தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் வைத்து விகாஸ் துபேவை போலீசார் பிடித்தனர். மத்திய பிரதேசத்தில் இருந்து கான்பூருக்கு விகாஸ் துபேவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து கொண்டிருந்த போது, விபத்தை பயன்படுத்தி ரவுடி விகாஸ் துபே தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விகாஸ் துபேவை என்கவுண்டரில் போலீசார் சுட்டுக்கொன்றனர்.

தேடப்பட்டு வரும் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தது, குற்றவாளியுடன் தொடர்பில் இருப்பது உள்ளிட்ட குற்றங்களுக்காக விகாஸ் துபேவின் மனைவி ரிச்சா துபே மற்றும் மகன் விகாஸ் துபே கைது செய்யப்பட்டிருப்பதாக மூத்தக் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே இந்த சம்பவத்தில் தொடாபுடைய விகாஸ் துபேவின் கூட்டாளிகள் 5 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், ஆறாவது நபராக விகாஸ் துபேவும் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த என்கவுன்ட்டா குறித்து உரிய விசாரணையை நடத்துவதற்காக விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி விகாஸ் துபேவின் மனைவி மற்றும் மகனை சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்துள்ளனர். தேடப்பட்டு வரும் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தது, குற்றவாளியுடன் தொடர்பில் இருப்பது உள்ளிட்ட குற்றங்களுக்காக விகாஸ் துபேவின் மனைவி ரிச்சா துபே மற்றும் மகன் விகாஸ் துபே கைது செய்யப்பட்டிருப்பதாக மூத்தக் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com