கொரடாச்சேரி அருகே வி‌‌ஷம் குடித்து பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை

கொரடாச்சேரி அருகே வி‌‌ஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
Published on

கொரடாச்சேரி,

கொரடாச்சேரி போலீஸ் சரகம் கமுகக்குடியை அடுத்த புரத்தாங்குடியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகள் ராதிகா (வயது 37). இவருக்கும், மேல உத்தரங்குடியை சேர்ந்த விவசாயி ரமேஷ் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த மாதம் 26-ந்தேதி தனது தாய் ஆரியம்மாளை பார்க்க புரத்தாங்குடிக்கு ராதிகா வந்திருந்தார். பின்னர் வீட்டில் இருந்த அவர் நேற்றுமுன்தினம் பூச்சிமருந்தை (விஷம்) குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராதிகா பரிதாபமாக இறந்தார்.

உதவி கலெக்டர் விசாரணை

இதுகுறித்து ஆரியம்மாள் கொடுத்த புகாரின்பேரில் கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி வழக்குப்பதிவு செய்துள்ளார். இறந்த ராதிகாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் திருவாரூர் உதவி கலெக்டர் ஜெயப்பிரித்தா விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com