நாடாளுமன்ற கூட்ட தொடருக்கு பின் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் - அன்புமணி ராமதாஸ்

குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Published on

சென்னை,

குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் இதில் திமுக தவறான பிரச்சாரம் செய்வதாகவும் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பா.ம.க.-வின் தேர்தல் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்துள்ள திருவேற்காட்டில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அன்புமணி, தமிழ்நாட்டில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். மேலும் நாடாளுமன்ற கூட்ட தொடருக்கு பின் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com