வாலாஜா அரசு மகளிர் கல்லூரி முகாமில் தங்கியிருப்போருக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம்

வாலாஜா அரசு மகளிர் கலை கல்லூரி முகாமில் தங்கியிருப்போருக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.
Published on

வாலாஜா,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டு, போலீசாரின் முழு கண்காணிப்பில் உள்ளது. மாவட்டத்துக்குள் மருத்துவ வசதிக்காக மட்டும் வருபவர்களை அனுமதிக்கின்றனர். மற்றவர்கள் யாரும் மாவட்டத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. இ-பாஸ் பெற்று வந்தாலும், அவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்த பிறகே உள்ளே வர அனுமதிக்கப்படுகின்றனர்.

அதன்படி கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரி மற்றும் 2 தனியார் கல்லூரிகளில் தங்க வைக்கப்படுகின்றனர். அங்கு, அவர்களுக்கு பி.வி.ஆர். பரிசோதனை எடுக்கப்படுகிறது. அதன் முடிவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்கள் அரசு மருத்துவமனை, வேலூர் அரசு மருத்துவமனை ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

நோய் தொற்று உள்ளவர்கள் தீவிர சிகிச்சைக்கு பின் முழு குணமடைந்ததும், வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். வீட்டுக்கு செல்பவர்கள் தங்களின் வீடுகளிலேயே சுயகட்டுப்பாட்டுடன் 2 வாரம் தனிமையில் இருக்க வேண்டும். அரசு கல்லூரியில் மொத்தம் 119 பேர் கட்டுப்பாட்டில் உள்ளனர். அதில் 13-ந்தேதி 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை இதுவரை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. இவர்களால் மற்றவர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் முகாமில் தங்கி இருக்கும் 119 பேருக்கும் குடிநீர் உள்பட அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. நேற்று காலை 10 மணி வரை தனிமைப்படுத்தப்பட்ட அவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவில்லை. அரசு பரிந்துரைத்த உணவுகளை சரிவர கொடுக்கவில்லை. அதேபோல் குளிப்பதற்கு சோப்பு உள்பட உபகரணங்களும் இல்லை. முகாமில் உள்ளவர்கள் கொரோனா தொற்று பாதிக்கும் அபாயம் உள்ளது. கொரோனா தொற்று உள்ளவர்களை அவர்களின் உறவினர்களும் சந்திக்க இயலாத நிலை உள்ளது.

இந்த தகவல்களை முகாமில் தங்கியிருப்போரின் உறவி னர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com