ஆபாச படம் பார்த்த 1,000 பேர் பட்டியல் தயார்: சம்மன் அனுப்பி விசாரணை நடத்த போலீசார் முடிவு

தமிழகத்தில் ஆபாச படம் பார்த்த 1,000 பேர் பட்டியல் தயாராக உள்ளது. அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Published on

சென்னை,

உலகத்திலேயே இந்தியாவில் தான் அதிகம் பேர் ஆபாச படங்களை பார்ப்பதாகவும், குறிப்பாக தமிழ்நாட்டில் மிக அதிகம் பேர் பார்ப்பதாகவும், குழந்தைகளின் ஆபாச படங்கள் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அமெரிக்க புலனாய்வுத்துறை மத்திய உள்துறைக்கு தகவல் அனுப்பியது.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்தவர்களின் செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் ஐ.பி. முகவரி அடங்கிய பட்டியல் மத்திய உள்துறை சார்பில் தமிழக காவல்துறைக்கு அனுப்பப்பட்டது.

இதுதொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ரவி கூறுகையில், மத்திய உள்துறை அனுப்பிய முகவரியில் உள்ளவர்களின் முழு தகவல்களையும் செல்போன் நிறுவனங்கள் மூலம் திரட்டி வருகிறோம். விரைவில் கைது நடவடிக்கை தொடங்கும்.

குழந்தைகளின் ஆபாச படங்களை பதவிறக்கம் செய்வதும், அதனை மற்றவர்களுக்கு அனுப்புவதும் குற்றமாகும். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனால் செல்போனில் ஆபாச படம் பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்தவர்கள், அதனை மற்றவர்களுக்கு பகிர்ந்தவர்கள் பீதி அடைந்துள்ளனர். இந்தநிலையில் போலீசார் பேசுவது போன்று பலருக்கு செல்போன் மூலம் மிரட்டல் விடுக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com