150-ரன்கள் அடித்திருந்தால் நல்ல ஸ்கோராக இருந்திருக்கும்; தோல்விக்கு பிறகு டோனி பேட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
150-ரன்கள் அடித்திருந்தால் நல்ல ஸ்கோராக இருந்திருக்கும்; தோல்விக்கு பிறகு டோனி பேட்டி
Published on

துபாய்,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்றது. போட்டிக்குப் பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியதாவது;-

நாங்கள் 150 ரன்கள்வரை எட்டுவோம் என எதிர்பார்த்தோம் ஆனால் கிடைக்கவில்லை. சில விக்கெட்டுகளை இழந்தபின் 15வது ஓவரிலிருந்து அடித்து ஆட நல்ல வாய்ப்புக் கிடைத்தும் எங்களால் ரன் ஸ்கோர் செய்ய முடியவில்லை. ஆடுகளம் கடினமானதாக இருக்கிறது என நினைத்தேன்.

150 ரன்களை எட்டியிருந்தால் நல்ல ஸ்கோராக இருந்திருக்கும். ஆடுகளம் இரட்டை தன்மையுடன் இருந்தது. இதனால், நம்முடைய இயல்பான ஷாட்களை ஆடமுடியவில்லை. டெல்லி பேட்ஸ்மேன்களும் இதே சிரமங்களை எதிர்கொண்டனர். உயரமான பந்து வீச்சாளர்களுக்கு பந்து நன்றாக திரும்பி சென்றது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com