புதுடெல்லி,
மத்திய மின்துறை மந்திரி ஆர்.கே.சிங், நேற்று மாநில மின்துறை மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். பின்னர், ஆர்.கே.சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தற்போது இந்தியா ரூ.71 ஆயிரம் கோடி மதிப்புள்ள மின்சாதனங்களை இறக்குமதி செய்து வருகிறது. இவற்றில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரூ.21 ஆயிரம் கோடி மின்சாதனங்களும் அடங்கும். ஆனால், இனிமேல் சீனா, பாகிஸ்தானில் இருந்து மின்சாதனங்களை இறக்குமதி செய்ய மாட்டோம்.
மாநில மின்வினியோக நிறுவனங்களும் சீனாவுக்கு ஆர்டர் கொடுக்கக்கூடாது. சீனா, தான் அனுப்பும் பொருட்களில் கொடிய வைரஸ் மூலம் நமது மின்கட்டமைப்புகளை சிதைக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.