7 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Also Read
மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் இடங்கள் அதிகரிப்பு - அரசு அனுமதி
கோப்புப்படம்

இந்த நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பள்ளி வேன் டிரைவர் போக்சோவில் கைது
கோப்புப்படம்
X

logo
Daily Thanthi
www.dailythanthi.com