வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: ஏப்.14 வரை மழைக்கு வாய்ப்பு

சென்னையில் ஒரு சில பகுதிகளில் இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: ஏப்.14 வரை மழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை,

தெற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடகிழக்கு திசையில் திரும்பி மத்திய வங்கக்கடல் பகுதிகளில் படிப்படியாக வலுகுறையக்கூடும். தமிழகத்தில் இன்று முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்றும், நாளையும், ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பான அளவை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை உயரும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com