தமிழ்நாட்டில் 4 இடங்களில் இன்று வெயில் சதமடித்தது

அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 102 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
சென்னை
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இயல்பை விட சில இடங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் இம்மாத இறுதி வரையில் வெப்பம் அதிகரித்தே இருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. அதிகபட்சமாககரூர் பரமத்தியில் 102 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவான இடங்கள் விவரம் வருமாறு:-
கரூர் பரமத்தி - 102 °F
ஈரோடு - 101 °F
வேலூர் - 101 °F
திருச்சி - 101 °F
Related Tags :
Next Story






