வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் 'முரசு' புயல் உருவாக வாய்ப்பு

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அந்தமான் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் உருவாக வாய்ப்பு
Published on: 

சென்னை,

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

நேற்று தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. அடுத்த 6 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) வலுவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் உருவாக வாய்ப்பு

இந்த நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அந்தமான் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அவ்வாறு புயலாக மாறும்போது இந்தியா பரிந்துரைத்த 'முரசு' என்ற பெயர் இந்த புயலுக்கு வைக்கப்படும். இந்த புயல் மேலும் வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 2-ந்தேதி மாலையில் ஆந்திரா அருகே வங்காள விரிகுடாவை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2-வது புயல்

இதன் காரணமாக வட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்த ஆண்டில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் வங்கக் கடலில் உருவாகும் 2-வது புயலாகும்.

X