10 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

மன்னார் வளைகுடா முதல் தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடிமின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Also Read
ரஜினியை இழிவுபடுத்தும் நோக்கில் தரக்குறைவாக ஆதவ் அர்ஜுனா பேசியிருக்கிறார் - இந்திய கம்யூ. கட்சி
கோப்புப்படம்

இந்த நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read
தமிழகத்தில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் கட்டணம் உயரும் 60 சுங்கச்சாவடிகள் எவை?
கோப்புப்படம்
X

Daily Thanthi
www.dailythanthi.com