தமிழகத்தின் 9 இடங்களில் சதமடித்த வெயில்

பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது.
தமிழகத்தின் 9 இடங்களில் சதமடித்த வெயில்
Published on

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும், சில பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் 9 இடங்களில் இன்று 100° பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு;

பரங்கிப்பேட்டை, கடலூர் 102.92° பாரன்ஹீட், வேலூர் 102.74° பாரன்ஹீட், திருத்தணி, தொண்டி, நுங்கம்பாக்கத்தில் 102.2° பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. நாகை 102.02° பாரன்ஹீட், தஞ்சாவூர் 100.4° பாரன்ஹீட் மற்றும் புதுச்சேரி 101.84° பாரன்ஹீட், காரைக்கால் 100.04° பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com