தொடங்கியது தென்மேற்கு பருவமழை... தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் வருகிற 26-ந்தேதி முதல் தொடங்கக்கூடும்.
தொடங்கியது தென்மேற்கு பருவமழை... தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை,

தென்மேற்கு பருவமழை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளிலும், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் நிக்கோபர் தீவுகளிலும், ஸ்ரீவிஜயபுரம் உள்பட அந்தமான் தீவுகளின் சில பகுதிகளிலும் தொடங்கியது. தென்மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் வருகிற 26-ந்தேதி முதல் தொடங்கக்கூடும்.

இதையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேலும் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், கோவை, நீலகிரி, சிவகங்கை மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். வருகிற 22-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com