தென்காசியில் திடீர் ஆலங்கட்டி மழை.!

தென்காசி மாவட்டத்தில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தென்காசி,

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் இன்று காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே, தென்காசிஉள்ளிட்ட தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தென்காசி மாவட்டம் தென்மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மாலையில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. ஆலங்கட்டி மழையை பார்த்து பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com