தமிழகத்தின் 10 இடங்களில் சதம் அடித்த வெயில்

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
தமிழகத்தின் 10 இடங்களில் சதம் அடித்த வெயில்
Published on

சென்னை,

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் 10 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. அதன்படி, சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், மதுரை நகரம், மதுரை விமான நிலையம், தொண்டி, நாகப்பட்டினம், கடலூர், திருச்சி, பரங்கிப்பேட்டை மற்றும் திருத்தணி ஆகிய இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com