

சென்னை,
தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 9 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் இன்று அதிகமாக வெப்பநிலை பதிவான இடங்கள் வருமாறு:-
சென்னை நுங்கம்பாக்கம் - 100.58
சென்னை மீனம்பாக்கம் - 101.3
மதுரை விமான நிலையம் - 100.4
நாகப்பட்டினம் - 101.3
பாளையங்கோட்டை - 100.58
தஞ்சாவூர் - 100.4
திருச்சி - 103.1
திருத்தணி - 102.2
வேலூர் - 102.38