

சென்னை,
தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் 6 இடங்களில் இன்று 100° பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு;
மதுரை நகரம் – 39.2°C = 102.56°F
மதுரை விமான நிலையம் – 40.0°C = 104.00°F
நாகப்பட்டினம் – 37.9°C = 100.22°F
பாளையங்கோட்டை – 38.4°C = 101.12°F
தஞ்சாவூர் – 38.0°C = 100.40°F
திருச்சி – 38.5°C = 101.30°F