

சென்னை,
தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் 5 இடங்களில் இன்று 100° பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு;
மதுரை நகரம் – 39.4°C = 102.9°F
மதுரை விமான நிலையம் – 40.1°C = 104.2°F
நாகப்பட்டினம் – 37.8°C = 100.0°F
தஞ்சாவூர் – 38.0°C = 100.4°F
தூத்துக்குடி – 38.6°C = 101.5°F