வெப்பநிலை இன்று அதிகரிக்க வாய்ப்பு: வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தென் தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதியும் நிலவி வருகிறது. இதன் காரணமாக, இன்றும் (20-03-2025), நாளையும் (21-03-2025) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் அசவுகரியம் ஏற்படலாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com