

சென்னை,
தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
அக்னி நட்சத்திரம் இன்று (மே 4,) தொடங்கும் நிலையில், சென்னையில் கடலோரப் பகுதிகளில் நிலவும் வெப்பச்சலனம் காரணமாக வெயிலின் தாக்கம் சற்று குறையும். வழக்கமான கடும் வெயிலுக்குப் பதிலாக, மேக மூட்டத்துடன் கூடிய வானிலை மற்றும் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வெப்பச்சலனம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், இது வெப்பத்தைக் குறைக்கும். கடுமையான வெப்ப அலையில் இருந்து தற்காலிக நிம்மதி கிடைக்கும், இருப்பினும் அக்னி நட்சத்திரம் என்பதால் குளுமையான சூழல் இருக்காது.வெயிலின் தாக்கம் குறைந்தாலும், மதிய நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.