7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் கன முதல் ஒரு சில இடங்களில் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி,
மேற்கு மாவட்டங்களான கோவை, நீலகிரி, திண்டுக்கல் ,தென்காசி ,விருதுநகர், கன்னியாகுமாரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் மிக கனமழையும் நகரப் பகுதிகளில் மிதமான முதல் சற்றே கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கும். பொள்ளாச்சி, ஆனைமலை ,கிணத்துக்கடவு, நெகமம்,உடுமலைப்பேட்டை ,பழனி வாடிப்பட்டி கொடைக்கானல் போடிநாயக்கனூர் ,கம்பம், உத்தமபாளையம், புளியங்குடி ,சிவகிரி, ராஜபாளையம், கடையநல்லூர், கடையம், அம்பாசமுத்திரம், ஆரல்வாய்மொழி, வள்ளியூர், சுற்று பகுதிகளில் பரவாலான மிதமான முதல் ஒரு சில இடங்களில் சற்றே கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சத்தியமங்கலம், நம்பியூர், பண்ணாரி, அந்தியூர், அன்னூர், ரெட்டிபாளையம், தாரமங்கலம் ,வனவாசி, மேட்டூர், சிறுவாளூர், டால்மியா ,ஏற்காடு, எடப்பாடி, கோபிசெட்டிபாளையம் ,இளம்பிள்ளை, நாமக்கல் மாவட்டம் செம்மேடு, மூலக்குறிச்சி சுற்று பகுதிகளில் மிதமான முதல் ஒரு சில இடங்களில் சற்றே கனமழை வரை பெய்யும்.
திருச்சி ,தஞ்சாவூர் ,கடலூர் ,பெரம்பலூர், அரியலூர் ,திருவண்ணாமலை ,தர்மபுரி, நாகப்பட்டினம் ,காரைக்கால் ,புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் ஆங்காங்கே லேசான மழை மட்டும் பெய்யக்கூடும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






